Video Corner
புதிய பதிவர்கள்
மலேசியா பாண்டியனா... யாருன்னே தெரியாதே! - ஸ்ரேயா
யாருன்னே தெரியாத மலேசியா பாண்டியன் என்பவர் என்வர் என் மீது வழக்கு தொடர்வதாக மிரட்டுவதா என ஆவேசப்பட்டுள்ளார் ஸ்ரேயா. மம்முட்டி, பிருதிவிராஜ், ஸ்ரேயா நடித்த 'போக்கிரி ராஜா' என்ற மலையாள படம் தமிழில் 'ராஜா போக்கிரி ராஜா' என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் வெளியிடுபவர் மலேசியா பாண்டியன். இந்த நிலையில், அதன் மலையாள தயாரிப்பாளரான தாமஸ் ஆன்டணி மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில், நடிகை ஸ்ரேயா ஒரு புகார் கொடுத்தார். அதில், "'போக்கிரி ராஜா படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டபோதே அந்த படத்தை வேறு மொழிகளில் 'டப்' செய்யக்கூடாது'' என்று ஒப்பந்தம் செய்து கொண்டேன். அந்த ஒப்பந்தத்தை தாமஸ் ஆன்டணி மீறிவிட்டார். எனவே அந்த படத்தை தமிழ் உள்பட வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த புகாரில் ஸ்ரேயா கூறியிருந்தார். இதற்கு தாமஸ் ஆன்டணி பதிலளிக்கவில்லை. ஆனால் மலேசியா பாண்டியன் என்பவர் பதில் கூறியிருந்தார். "என் படத்தை தடை செய்ய முயற்சிப்பவர்கள் மீது கோர்ட்டில் நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன்'' என்று அவர் கூறியிருந்தார். மேலும் ஸ்ரேயா மீது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) யில் மலேசியா பாண்டியன் புகார் செய்தார். இதுபற்றி நடிகை ஸ்ரேயாவிடம் கேட்டபோது, "போக்கிரி ராஜா (மலையாள) படம் தொடர்பாக எனக்கும், தாமஸ் ஆன்டணிக்கும் இடையேதான் ஒப்பந்தம் இருக்கிறது. மலேசியா பாண்டியன் யார் என்றே எனக்கு தெரியாது. அவருடன் நான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. அப்படி தெரியாத நிலையில், என் மீது அவர் வழக்கு தொடருவதாக மிரட்டுவதா? இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்,'' என்றார்.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm
Related Post(s):
கண்ணாடி இதயம் பற்றி மனந்திறக்கிறார் குருசாமி
‘கண்ணாடி இதயம்’ படம் பற்றி இயக்குனர் குருஷங்கர் கூறியதாவது: இதயம் கண்ணாடியை போன்றது. கண்ணாடியில் ஒரு சிறுகல் பட்டாலும் உடைந்துவிடும். அதுபோல் இத… read more
ஒரு வாரத்தில 40 மணித்தியாலம் மட்டும் வேலை செய்யுங்கள் மீறினால் ஆபத்து
இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண… read more
தான் நாவல் ஆசிரியராம் – பெருமைப்படும் பூனம் கபீர்
ஷெரலி பிலிம்ஸ் சார்பில் நசீர் தயாரிக்கும் படம், ‘வதம்’. அபுஷா ஒளிப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் பற்றி இய… read more
பெண்கள் குளிப்பதை படம் பிடிக்கும் விவகாரமான பூசாரி
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் கிராமத்தில் பெண்கள் குளிப்பதையும், அவர்கள் கழிவறைக்கு செல்வதையும் அப்பகுதியை சேர்ந்த பூசார… read more
நமது வலைப் பூக்களில் navbar ஐ நீக்கும் வழிமுறை !!
இப்போது நமது வலைப்பூக்களில் navbar ஐ நேக்கும் வழிமுறையை பார்ப்போம் எல்லோருக்கும் ஆசை இருக்கும் எப்படி ஆச்சும் இந்த navbar ஐ நீக்கிய ஆகனும் இது பெரு… read more
தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக் கைதிகள் சட்டமா அதிபருக்கு கடிதம்
சட்டத்திற்குப் புறம்பாக இரண்டரையாண்டு காலமாக சிறையில் வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்ட… read more
கோதாவின் போர் நூலிலிருந்து ஒரு குறிப்பு
2008 ஒக்ரோபர் மாதத்தில்தான் இராணுவ ரீதியாகவே புலிகளை ஒடுக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இந்திய அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு… read more
பொன்சேகாவால் எம்.பி. ஆக முடியாது! - வெப்துனியா
வெப்துனியாபொன்சேகாவால் எம்.பி. ஆக முடியாது!வெப்துனியாஇலங்கை அதிபர் ராஜபக்சவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை read more
இலங்கைப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் ; உலகத் தமிழ் அமைப்புக் கோரிக்கை
இயக்கத்தின் தலைவர் செல்வன் பச்சைமுத்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிஇலங்கையில் 40 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தமிழர் களை முள்ளிவாய்க்காலில் கொ… read more
மக்களவையில் கறுப்புப் பணம் குறித்த 97 பக்க வெள்ளை அறிக்கையைத் ... - Oneindia Tamil
தினகரன்மக்களவையில் கறுப்புப் பணம் குறித்த 97 பக்க வெள்ளை அறிக்கையைத் ...Oneindia Tamilடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கறு read more
மறுமொழிகள்
முகப்பு

  அழியாத கோலங்கள்