Video Corner
புதிய பதிவர்கள்
கல்விச்சந்தை
சமீபத்தில் ஆசிரியத் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடத்தப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. மார்ச் 16ம் தேதி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என்றும், மே27 அன்று தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலதிகத் தகவலுக்கு இங்கு செல்லவும். இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாளே அதற்கான பயிற்சி வழங்கப்படுவதாக பல அறிவிப்புகள் வெளிவந்தன. எப்படியும் பணத்தை இவங்ககிட்ட கொடுத்திடனும் மதுரையில் பிரபல பயிற்சி நிறுவனம் ஒன்று பயிற்சிக்கான சேர்க்கைக்கு மட்டும் ஒருநாளை அறிவித்திருந்தது. அன்று அங்கு குவிந்த கூட்டம் திருவிழாவிற்கு வந்த கூட்டம் போல் இருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கூட்டம் குவிந்தது. அங்கு அட்மிஷன் வாங்கியதையே ஏதோ வேலை வாங்கிவிட்டது போல் சந்தோஷத்தில் திளைத்தனர். அனைத்துப் பாடங்களுக்கும் தனித்தனி இடங்களில் அட்மிஷன்(அவ்வளவு கூட்டம்). இதற்கான கட்டணம் எந்தப்பாடமாக இருந்தாலும் ரூ10000/. தமிழுக்கு மட்டுமே சுமார் 400பேர் வந்திருப்பர். கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். பணம் கட்டியதற்கான ரசீது எதுவும் கிடையாது. ஒரு அட்டையில் எழுதிக் கொடுக்கின்றனர்.இங்கு வருபவர்கள் அனைவரும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் வேலை செய்பவர்களாக, வேறு தனியார் நிறுவனங்களிலோ, குடும்பத் தலைவியாகவோ அல்லது வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டு வேலை கிடைக்காமல் இருப்பவர்கள். எப்படியாவது வேலை வாங்கிவிடவேண்டும் என்ற உந்துதலினால்தான் பலர் இங்கு வந்து சேர்கின்றனர். பணத்தினை கஷ்டப்பட்டு கட்டுகின்றனர். எல்லோருக்கும் படிக்கும் திறமை உண்டு. ஆனால் பயிற்சிக்கு சென்றால் நம் பாடத்தினைப் படிக்கின்ற சக நண்பர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளலாம். பாடத்திட்டத்திற்கேற்ப அனைத்து பாடத்திற்கும் நகல்கள் கிடைக்கும். ஆனால் இதனைச் சாக்காக வைத்து பயிற்சி என்ற பெயரில் கொள்ளை லாபம் சம்பாதிப்பவர்களும் இருக்கின்றனர். பயிற்சிக்கு அட்மிஷன் பெற வந்தவர்கள் பணத்தை கொடுத்தாச்சு... கொஞ்சம் ரிலாக்ஸ் டுடே ஜெனரல் நாலெட்ஜ் : 1. கொசுவே இல்லாத நாடு - பிரான்ஸ்2. காகம் இல்லாத நாடு - இங்கிலாந்து3. கரண்டே இல்லாத நாடு - .... அட இதுக்கு இவ்வளவு யோசிக்கலாமா!!! தமிழ்நாடு
Related Post(s):
Avengers தெரியாத விடயங்கள்
இப்பொழுது உலகெங்கும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் avengers இது மார்வெல் நிறுவனத்தின் தயாரிப்பு இதுவரை வெளிவந்த மிக உயர்ந்த பட்ஜெட் படங… read more
அரசியை நம்பி விகடனை கைவிட்ட - விகடன் கைவிட்ட மதன்.
ஆனந்த விகடனில் இணை ஆசிரியராகப் பணிபுரிந்த, அதன் வளர்ச்சியின்போது பக்கத்திலிருந்த மதனுக்கும், விகடன் நிர்வாகத்துக்கும் பெரிய சண்டை ஒன்று வந்திருக்கிறது… read more
வியட்நாம் விடுதலைப்போர் # 5
ஏற்கெனவே உலகப்போரில் வதைபட்டு நொந்துபோயிருந்த அமெரிக்க வீரர்களுக்கும் சரி,அமெரிக்க மக்களுக்கும் சரி, ஒரு தேவையும் இல்லாமல் இவ்வாறு வியட்நாம் மக்களுடன்… read more
வியட்நாம் விடுதலைப்போர் # 5
ஏற்கெனவே உலகப்போரில் வதைபட்டு நொந்துபோயிருந்த அமெரிக்க வீரர்களுக்கும் சரி,அமெரிக்க மக்களுக்கும் சரி, ஒரு தேவையும் இல்லாமல் இவ்வாறு வியட்நாம் மக்களுடன்… read more
உங்கள் கணினி மூலம் பகுதி நேரத்தில் சம்பாதிக்க தொழில்_1
வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் உள்ளன. ஆனால் பலர் SMS , MLM என்று ஏதாவது ஒன்றில் ஏமாற்றப்பட்டே வருகின்றனர். சரி ந… read more
சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(chennai youth blogger meet live telecost)
இனிய சக வலைபதிவர்களே, சென்னையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யூத் பதிவர்கள் சந்திப்பின் நேரலைக்கான லிங்க்: மேற்கண்ட லிங்க்-ஐ கிளிக் செய… read more
மறுமொழிகள்
முகப்பு

  அழியாத கோலங்கள்