கூட்டணிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சிய அதிமுக: 'டேப்' ஆதாரம் இருப்பதாக பிரேமலதா தகவல்

சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, தங்களுடன் கூட்டணி அமைக்க அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட 3 பேர் காலில் விழாத குறையாக கெஞ்சியதாகக் கூறியுள்ளதோடு, அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இனியும் விஜய்காந்தை அதிமுக சீண்டினால் அந்த ஆதாரங்களை வெளியிடு​வோம் என்றும் எச்சரித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவரான விஜயகாந்த், இனி பொதுச் செயலாளராகவும் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த 'ராமு வசந்தன் இறந்ததும் அந்தப் பதவிக்காக, பல முக்கிய தலைகளும் போட்டியிட, இதை வைத்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அதிமுக முயன்றதாகவும், இதனால் தான் அந்தப் பதவியை தானே வைத்துக் கொண்டார் விஜய்காந்த் என்கிறார்கள். கூட்டத்தில் பிரேமலதா பேசுகையில், கடந்த ஆட்சியில் 13 இடைத்தேர்தல்கள் நடந்தன. அதில் தன்னந்தனியாகத் தைரியத்தோடு போட்டியிட்டது தே.மு.தி.க. ஆனால், 5 இடைத் தேர்தல்களில் போட்டி போடாமலேயே ஓடி ஒளிந்தவர்கள், பென்னாகரத்தில் டெபாசிட்டைப் பறி கொடுத்தவர்கள் எல்லாம் திராணி பற்றிப் பேசுகிறார்கள். அதிமுகவோடு கேப்டன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் அந்த அம்மா ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? தே.மு.தி.கவோடு கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று சொல்கிறார் ஜெயலலிதா. நம்மோடு கூட்டணி சேர அவர்கள் எவ்வளவு இறங்கி வந்தார்கள் என்று சொன்னால், அவர்கள் முகத்திரை கிழிந்து தொங்கும். இப்போது, அமைச்சர்களாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அப்போது கேப்டனை சந்திக்க எங்கள் வீட்டுக்கு வந்து காத்திருந்தார்கள். அவர்கள் என்னென்ன பேசினார்கள். நம்மோடு கூட்டணி வைக்க எப்படி எல்லாம் அலைந்தார்கள், காலில் விழாத குறையாக எப்படிக் கெஞ்சினார்கள் என்பதை எல்லாம் பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதைக் கேட்கும் தைரியம் அந்தம்மாவுக்கு உண்டா?. இனியும் எங்களை சீண்டினால் அந்த ஆதாரங்களை வெளியிடு​வோம் என்றார். முன்னதாக இந்தக் கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகளின் செல்போன்களை எல்லாம் தொண்டர் படையினர் வாங்கி வைத்துக் கொண்டே உள்ளே அனுப்பினார். இதற்கான காரணத்தையும் விஜய்காந்த் பின்னர் விளக்கினார். அவர் பேசுகையில், சங்கரன்கோவில் இடைத் தேர்தல் வேட்பாளரை பொதுக் குழுவிற்கு முன்பாகவே ஏன் அறிவித்தேன் தெரியுமா? தேர்தலில் நாம் கலந்து கொள்வது தொடர்பான ஒரு சர்ச்சையை இந்தக் கூட்டத்தில் உருவாக்க அதிமுக சதித் திட்டம் தீட்டியிருந்தது. அதை முறியடிக்கத்தான் வேட்பாளரை அறிவித்துவிட்டுப் பொதுக்குழுவிற்கு வந்தேன். மேலும் வெளியிலிருந்து செல்போன் மூலம் இங்கே கலவரத்தை யாரும் ஏற்படுத்திவிடக் கூடாது என்றுதான் இங்கே செல்போன்களுக்குத் தடை விதித்தேன் என்றார்.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm

2 +Vote       Tags: இந்தியா தமிழகம்
 


Related Post(s):

 

நானும் நம்பர் 1 நடிகைதான் சொல்லாமல் சொல்லும் சமந்தா

kavimahan

எல்லோரையும் டாப் நடிகை எனக் கூறுகிறார்கள். ஒருவர்தான் டாப் நடிகையாக இருக்க முடியும் என்றார் சமந்தா. ‘பாணா காத்தாடிÕ, ‘மாஸ்கோவின் காவிரிÕ ஆகிய படங்களில… read more

 

ஹீரோ இல்லாத அதிரடி அதிர்சி தரும் திரைப்படம் தமிழில்

kavimahan

ஹீரோயின் முக்கிய வேடத்தில் நடிக்க, ஹீரோவே இல்லாத படமாக உருவாகிறது ‘வதம்’. இது பற்றி இயக்குனர் மதிவாணன் கூறியதாவது: மூடுபனி, உச்சகட்டம் போன… read more

 

இறக்குமதிகளால் திணறி போய் உள்ள உள்ளூர் அழகிகள்

kavimahan

வெளிநாட்டு ஹீரோயின்கள் வரவால் தென்னிந்திய பட ஹீரோயின்கள் திணறி வருகின்றனர். கோலிவுட்டில் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்ஸன் (மதராசபட்டினம்), அரபு நாட்டை சே… read more

 

இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றம் செய்ய

kavimahan

நம்மிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து வைத்திருப்போம், அதில் நாம் ஒரு சில எழுத்தையோ அல்லது வார்த்தையையோ மாற்ற வேண்டி இருக்கும். அவ்வாறு மாற்… read more

 

கள்ளத் தொடர்பு வைத்து மனைவியிடம் மாட்டுப் பட்ட கணவர் (செய்யிறதை ப்ளான் பண்ணி செய்யணும்)

sunfun

ஒருவர் ஒரு பொன்னுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார் அவர் கையும் களவுமாக மாட்டுப் பட்டுள்ளார் அவர்கள் இரண்டு பேருக்கும் தர்ம அடி விலுகின்றன.… read more

 

ரஞ்சிதா எடுக்கப்போகும் படம் சொல்ல போவது என்ன? நித்தியானந்தவின் ஆண்மையா?

kavimahan

நித்தியானந்தாவின் தீவிர சிஷ்யையான நடிகை ரஞ்சிதா அவரை பற்றி படம் இயக்க போகிறாராம். நாடோடி தென்றல், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்… read more

 

சமூக வலைத்தளங்கள் மீதான வியாபாரங்கள் அதிகரிப்பு

kavimahan

கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் கடந்த வாரம் 421 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை அறிமுகப்படுத்தியது. தற்போது முகநூல் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக வியா… read more

 

சிறிலங்கா: போர் முடிந்து மூன்றாண்டுகள் – ‘காணாமல்போனோர்’ ஆயிரக்கணக்கானோர்

வன்னி ஈழவன்

யுத்தத்தின் இறுதியில், சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமற் போயுள்ளனர். இதில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், புலிகளின் உயர்… read more

 

அஜித்துக்காக அலையும் நாய் பிரியை அனுஜா

kavimahan

கமலின், “உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடித்தவர், அனுஜா அய்யர். இவர், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகை. எந்த வகையில் இவரை கவர்ந்தாராம் அஜித்? “ஒரு ஹீரோவிற்… read more

 
 

            






  அழியாத கோலங்கள்
  ஆயா : என். சொக்கன்
  ஜெராக்ஸ் : பிரபாகர்
  நாக்க முக்க நாக்கா ஓ ஷகலாக்கா ஓ ரண்டக்கா : அனிதா
  ஓசையில்லா மனசு : நசரேயன்
  நிறம் : மாமல்லன்
  உங்க வரலாறு என்ன? : பொன்ஸ்
  மனசுக்கு நேர்மையாய் : இளவஞ்சி
  அவன் வருவானா : உண்மைத் தமிழன்
  பிரமச்சாரிகளுக்கு : Bala
  சில்லறைகள் : நான் ஆதவன்